எளிய நோய்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய நோய்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள்

இன்று உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாற்ற வைத்த கொரோனா என்னும் கொடிய நோய் உலக மக்களை அச்சுறுத்த செய்கிறது. நம் உடலை தாக்கும் ஒவ்வொரு நோயுக்கும் நம் முன்னோர்கள் ஏதேனும் ஒரு வழி வைத்திருப்பார்கள், அது நம் முதியோர்களுக்கு கை கண்ட மருந்தாகும். ஆனால், இந்த கொரோனா காலத்தில் நமக்கு சிறிய சளி, இருமல் கூட மிகவும் அச்சுறுத்தலாக மாறிருக்கிறது. எனவே, இவ்விடுக்கையில் எளிய நோய்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

எளிய மருத்துவக் குறிப்புகள்

மசாலா தேங்காய் பால்

நம் சித்த மருத்துவத்தில் உங்கள் சமையல் அறையில் தினமும் பயன்படும் சில உணவு பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய பல குறிப்புகளில் ஒரு மருத்துவ குறிப்பினைப் பற்றி இவ்விடுகையில் பார்க்க இருக்கிறோம். கொரோனாவின் முக்கிய அறிகுறியான சளியை போக்க தேங்காய் பாலில் கிராம்பு தூள் சேர்த்து குடித்தால் சளி முழுவதும் வெளியேறிவிடும்.

செய்முறை:

 • தேங்கையை உடைத்து அந்த தேங்காய் பத்தையை மின் அம்மி அல்லது கலவை கருவியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
 • அந்த கலவையை வடிக்கட்டியில் வடிக்கட்டி தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளவும்.
 • பின், சிறிதளவு கிரம்பை எடுத்து அதை மின் அம்மியில் போட்டு அரைக்கவும்.
 • அதற்கு பிறகு, வடிகட்டிய தேங்காய் பாலையும் அரைத்த கிராம்புத் தூளையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு அரை குவளை அளவு குடிக்கவேண்டும். இவ்வாறு இதனைக் குடித்துவந்தால் நெஞ்சு சளி சரசரவென வெளியேறிவிடும். அதைப்போல, தேங்காய் பாலில் கிரம்புக்குப் பதில் கடுக்காய் பொடியைப் போட்டு கலக்கி குடித்தால் மார்பக சளி முழுவதும் மளமளவென வெளியேறிவிடும்.

தேங்காய் பாலின் பலன்கள்:

 • தேங்காய் பாலில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் கூடும். இரும்பு சத்து நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு விஷயம் ஆகும். அது தான் நம் உடலின் பிராணவாயு பரிமாற்றத்தை அதிகரிக்கும்.
 • இவை உடல் வலிமையைக் கூடும். இது தசை பிடிப்பைக் குறைக்கும். தசை பிடிப்பை வருவதற்க்கு காரணமே நம் தசைகளுக்கு தேவையான அளவு பிராணவாயு (ஆக்சிசன்) சென்றடையாதக் காரணத்தினால் தான்.
 • தேங்காய் பாலினால் பிராணவாயு பரிமாற்றம் அதிகரிக்கும் எனப் பார்த்தோம். இந்த பிராணவாயு பரிமாற்றம் குறைந்துவிட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதயத் துடிப்பு குறைய ஆரம்பிக்கும். ஆகவே, தேங்காய் பால் இதயம் சீராக செயல்பட உதவுகிறது.
 • இதனை எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும். எனவே, இது நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • இவை நம் உடலின் பிராணவாயு விநியோகத்தை அதிகரிப்பதால் மூச்சு திணறல் ஏறப்படாமல் தடுக்கும். ஆகையால் நம் நுறையீரல் சீராக செயல்படும்.
 • தேங்காய் பால் அருந்தினால் உடல் பருமன் குறையும். தேங்காய் பாலில் இருக்கும் நல்ல கொழுப்பு சத்தினால் உடல் சக்தியை அதிகரிக்கும். இது உடல் பருமன் உள்ளவர்கள் காலை வேலையில் எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் உணவு நுகர்வைக் குறைக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன. இந்த நல்ல கொழுப்பானது கணைய சுருப்பு நீரை அதிகரிக்கும். இதனால், ரத்த சக்கரை அளவை சீராக வைக்கும்.

மூலிகை நீராவி

மூச்சு திணறலுக்கு நாம் பொதுவாக பயன்படுத்தும் முறையான நீராவி உள்ளிலுத்தலைச் செய்யலாம். இந்நீராவியைப் பிடிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்ததே நாம் தயார் செய்யலாம்.

எளிய நோய்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள்

தேவையான பொருட்கள்:

 1. வெற்றிலை – 2
 2. எலுமிச்சம் – 1/2
 3. கற்பூரவள்ளி இலை – 3
 4. மஞ்சள் தூள் – சிறிதளவு
 5. கல் உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் ஒரு குவளை தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
 • அதில் சிறிதளவு வெற்றிலை, அரை எழுமிச்சப் பழத் தோல், மூன்று கற்பூரவள்ளி இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 • இக்கலவையை நன்றாக நீராவி பறக்க கொதிக்க வைக்கவும்.

இப்பொழுது, கொதித்த இந்நீரை ஒரு போர்வைக்குள் எவ்வித நீராவியும் வெளியே செல்லாதவாறு நீங்கள் அமர்ந்துகொள்ளவேண்டும். இவ்வாறு நீராவி பிடிக்கும் பொழுது உடலில் உள்ள வியர்வை வெளியேறும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் சுவாச பிரச்சனைகளும் தீரும்.

நீராவி உள்ளிலுத்தல் பயன்கள்:

நீராவி உள்ளிலுத்தல் மூக்கடைப்பு செறியாகிவிடும். உடம்பிலோ அல்லது தலையிலோ நீர் சேர்க்கை ஏற்ப்பட்டால் ரத்த குழாய்களில் எரிச்சல் ஏற்ப்படும். இந்த எரிச்சலை நீக்கவே இந்த நீராவி பிடித்தல் உடவுகிறது. ஆகையால், மூச்சு பிரேச்சனைகள் நீங்கிவிடும். நீராவி பிடித்தலால் மூக்கடைப்பு பிரெச்சனை மட்டுமே தீருமே தவிர, இது எந்த வித நுண்ணுயிர்களையும் அழிக்காது.


கற்ப்பூர எண்ணெய் வைத்தியம்

நம் முன்னோர்களின் அறிவுரையின் அடிப்படையில் அன்றைய காலத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு சளி பிடித்தால் சிறிது கற்ப்பூரத்தை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கரண்டி (டேபில்ஸப்பூன்) தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் சுடவைக்கவும். பின், அதை எடுதது சிறிது நேரம் ஆற வைக்கவும். பின், கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணையை குழந்தையின் மார்பு, முதுகு போன்ற இடங்களில் நன்றாக தேய்கவும். இப்படி செய்யும் பொழுது சளி கரைந்துவிடும்.


மசாலா பால்

நெஞ்சு சளியை முழுவதுமாக வெளியேற இரவு படுக்கைக்குப் போவதற்க்கு முன் ஒரு குவளை பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி வரி சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிதளவு நாட்டு சக்கரை சேர்த்து குடித்தால் நெஞ்சு சளி சரியாகிவிடும்.


தூதுவளைச் சாதம்

தூதுவளை இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். பின், அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உழுந்தம் பருப்பு அரை ஸ்பூன், கடலைப் பருப்பு அரை ஸ்பூன், வரமிளகாய் தேவைகேற்ப போட்டு, நாம் எடுத்து வைத்த தூதவளை இலைகளையும் அதனுடன் சேர்த்து வதக்கி பெரிய வெங்கையம், தக்காளி, புளி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின் இதனை மின் அம்மியில் போட்டு அரைக்கவும். அரைத்த இந்த கலவையை அரவைத்தவுடன் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சளித் தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும். அரைத்து வைத்த தூதுவளை இலைகளை மிளகு, சீரகம், தக்காளி சேர்த்து ரசம் செய்து குடித்து வர சளி வெளியேறிவிடும்.

தூதுவளை பலன்கள்:

 • இவ்விலைகளில் இருக்கும் சாறு அழற்சியைக் குறைக்கும் தன்மையைக் கொண்டது.
 • இதன் வேர்களில் இருக்கும் சாறு அதிக உடல் வழியைத் தீர்க்கும் வல்லமை கொண்டது.
 • தூதுவளை சுவாச நோய்களை குணமாக்க உதவுகிறது. இதை ஆஸ்த்மா நோயாளிகளுக்கு நோயை குணபடுத்தப் பயன்படுத்துகின்றன.
 • தூதுவளை நரம்பு நச்சுக்களை அழிக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
 • தூதவலையின் இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது ரத்தத்தின் சக்கரை அளவைக் குறைக்கும்.
 • சித்த மருத்துவ முறைப்படி கல்லீரல் நோய்களைக் குணபடுத்தும். அதற்கு உயிர் வழியேற்ற எதிர்பொருள் திறனும் உண்டு.

மேலும் இது போன்ற மருத்துவக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள, New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க. இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.

4 thoughts on “எளிய நோய்களுக்கு எளிய மருத்துவக் குறிப்புகள்

 1. Coconut milk is differentiated into subtypes based on fat content. They can be generalized into coconut cream (or thick coconut milk) with the highest amount of fat; coconut milk (or thin coconut milk) with a maximum of around 20% fat; and coconut skim milk with negligible amounts of fat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *